அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இவர்களை பாஜக இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவின்போது திருவண்ணாமலையில் ஆளுநர் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ அழைத்து பாஜக சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகவு,ம் இபிஎஸ் மட்டும் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்தால் கூட தினகரன் மற்றும் சசிகலாவை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது சசிகலா ஜெயிலில் இருந்த போது அடிக்கடி தினகரன் தான் அவரை சந்தித்து பேசினார். அப்படி நெருக்கமாக இருந்த சசிகலா மற்றும் தினகரன் தற்போது டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவது ஏன் என்ற கேள்வி தான் பலரது மத்தியிலும் இருக்கிறது. சசிகலா தினகரனிடமிருந்து டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது தினகரனின் உதவி செயலாளரான ஜனா சசிகலா ஜெயிலில் இருந்த போது அதிக அளவில் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு தினகரனும் உதவியதாக கூறப்படுவதால் தான் சசிகலா தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதன் பிறகு அமமுக கட்சியின் நிதி விவகாரம் அனைத்தையும் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா கவனித்துக் கொள்வதாகவும் கட்சியிலிருந்து ஆட்களை தூக்குவது சேர்ப்பது போன்ற பணிகளை ஜனா செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்களால்தான் சசிகலா தினகரனுடன் இணைய விரும்பாததாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.