இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியின் எல்லைகளை மூடினால் தான் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவபர்களால் தான் தொற்று அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் அனுமதி என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 215 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி பிள்ளையார்குப்பம், கோரிமேடு, வைத்திக்குப்பம், காரைக்காலை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வர் இதுபோன்ற அதிரடி முடிவுகளை மேற்கொண்டுள்ளார்.