Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 சேமித்தால் போதும்…. 5 வருடம் கழித்து…. லட்சாதிபதி ஆகலாம்…!!

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் பல வங்கிகளும் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இந்த திட்டமானது 2004 ஆம் வருடத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதில் முதலீடு செய்தால் நல்ல ஒரு வருமானம் கிடைக்கிறது. 60 வயது பூர்த்தியாகிய யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள், 55 வயதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 50 வயதிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம்.

இதற்கான நிபந்தனைகள்:

குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். அதிக பட்ச சேமிப்பு தொகை 15 லட்சம். மத்திய அரசு நிர்ணயிக்கும் வகையில் தான் லாபம் கிடைக்கிறது. இதற்கான வட்டி வீதத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. சேமிப்புக் காலம் 5 வருடங்கள் ஆகும். நமக்கு தேவைப்படும் பொழுது வருடத்தை கூட்டிக் கொள்ளலாம். தனியாகவோ கூட்டாகவோ கணக்கை திறந்து ஆரம்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து அடையாள ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் சப்போட்டா அத்துடன் வழங்க வேண்டும்.

இதற்கு ஆதார் அட்டையும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் முதிர்வு காலத்திற்கு முன்னரே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணத்தை எடுக்கும் வசதி கூட இந்த திட்டத்தில் இருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வங்கி கிளையிலும் இந்த கணக்கை நீங்கள் திறக்க முடியும். அரசின் திட்டம் என்பதால் இதில் எந்த ஆபத்தும் இருக்காது.

Categories

Tech |