தமிழ் சினிமாவில் 90’ஸ் காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவருடைய இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகை மீனா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடைய கணவர் இறந்த துக்கத்திலிருந்து என்னால் மீண்டும் வர முடியவில்லை. இரண்டாம் திருமணம் குறித்து தற்போது கனவில் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. அதற்குள் இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தற்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டும்தான் முழு கவனமும் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் என்னை பற்றி பரவும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.