Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி அக்கா கூட 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருக்கும் அமைச்சர்: சீறும் அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, நம்முடைய அருமை சகோதரி கீதா ஜீவன் அவர்கள்…  கனிமொழி அக்கா கூடவே 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அங்கே தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம இல்லாத மிச்சம் கொஞ்சம் நேரம் இருந்தால் இங்கே வருவார்கள். திமுகவினுடைய குடும்ப ஆட்சிக்கு எப்படி மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு உதாரணமோ, அவர் தந்தைக்குப் பிறகு அவர்.

அவருக்கு பிறகு இப்போது பையன், அவருடைய தங்கச்சி கனிமொழி அவர்கள் துணை பொதுச்செயலாளராக இருக்கிறார், அதேபோல கீதாஜீவன் அவர்கள் இன்னொரு உதாரணம்..  அப்பா வந்து மாவட்டத்தினுடைய மாவட்ட செயலாளர் அமைச்சர், அதன் பின்பு கீதா ஜீவன் அவர்கள் எம்எல்ஏ, இங்கே அமைச்சர், மாவட்ட செயலாளர், இப்போது கீதாஜீவன் உடைய தம்பி ஒரு குடும்பத்திற்கு மூன்று பேர் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று தம்பியும் ஒரு மேயர்.

மொத்தமாக தூத்துக்குடியை குத்தகைக்கு எடுத்துவிடலாம் என்று கீதாஜீவன் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பா, அப்பாக்கு பிறகு அவர், அவருக்கு பிறகு தம்பி, வரிசையாக இருக்கிறது. இவர்கள் இரண்டு பேருக்குமே இங்கே யார் பெரியவர் என்று அப்பப்போ சண்டை நடக்கும். இந்த சண்டை எல்லாம் ஓய்ந்து விட்டது என்றால் ? அப்பப்போ தொகுதி பக்கம் வந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்வார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |