Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாமியார் கூட அடிக்கடி சண்டை வரும்… பரிதாபமாக பலியான இளம்பெண்… விசாரணை நடத்திவரும் ஆர்.டி.ஓ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாமியார் மருமகளுக்கு நடந்த சண்டையில் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் பகுதியில் முருகேசன் மற்றும் அவரது மனைவி நாகவள்ளி வசித்து வந்துள்ளனர். இவரது மகன் சத்திய மூர்த்தி(30). இந்நிலையில் இவருக்கு கடந்த 4 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சத்திய மூர்த்தி சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து உமா மகேஸ்வரிக்கும் அவரது மாமியார் நாகவள்ளிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் உமாமகேஸ்வரி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் காவல்துறையினர் இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த நிலையில் பரமக்குடி ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |