தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முறையான சாலைவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள அகமலை ஊராட்சியில் கரும்பாறை கிராமம் உள்ளது. இங்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகள் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனைதொடர்ந்த்து கரும்பறையில் இருந்து சோத்துப்பாறைக்கு சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்துள்ளனர். அங்கேயும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ் செல்வன் தலைமையில் பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும் சாலைகள் இல்லாமல் மிகவும் அதிபடுவதால் விரைவில் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.