Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம்!

கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன.

மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் தொற்றுடன் இருப்பது கண்டறியப்பட்டால், அதை பி.சி.ஆர் சோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்” என மாநில மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில், இதுவரை 295 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குணமடைந்தவர்கள் அடங்குவர். மேலும் 251 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |