பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் நேற்று தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் அமிதாப்பச்சனுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், தி லெஜன்ட் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர். இந்திய திரை உலகின் சூப்பர் ஹீரோ அமிதாப்பச்சன் தன்னுடைய 80-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.
அவருக்கு என்னுடைய அன்பான மற்றும் மரியாதை ஆன பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த வாழ்த்துக்கு தற்போது அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி சார் நீங்கள் எனக்கு அதிக மதிப்பை தருகிறீர்கள். உங்கள் மகத்தான இருப்புக்கும் பெருமைக்கும் என்னை என்னால் ஒப்பிட முடியாது. நீங்கள் ஒரு சக ஊழியர் மட்டுமல்ல என்னுடைய நண்பராகவும் இருக்கிறீர்கள். உங்கள் கருணையை நான் நன்றியுடன் வைத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rajni .. sir .. you give me too much credit .. I cannot compare myself to your immense presence stature and glory .. you have been not just a colleague,but a most dear friend.. your graciousness I do envelop with my gratitude and love ❤️🙏🏻🙏🏻 https://t.co/514jv8qQsB
— Amitabh Bachchan (@SrBachchan) October 11, 2022