தமிழகத்தில் மாலை வகுப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஏராளமான அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டாகப் பிரித்து கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி காலை ஒரு சில மாணவர்களும் அதன் பின் மாலை ஒரு சில மாணவர்கள் என கல்லூரிக்கு வந்து செல்வர்.
இந்நிலையில் மாலையில் படிக்கும் மாணவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாமல் போவதாக பல புகார்கள் கல்வி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தன. அந்த வகையில்,
மாலை நேர வகுப்புகளை முழுவதுமாக ரத்து செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி காலை மற்றும் மாலை வகுப்புகளை ஒன்றாக இணைத்து காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒரே பொது வகுப்பாக இணைத்து வைக்க வேண்டும் என்றும் அதற்காக கல்லூரிகளுக்கு என்னென்ன தேவைப்படும் அதற்கான பட்டியலை தருமாறும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.