தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – கால் கப்
ஜவ்வரிசி – 1கப்
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 6
அரிசி மாவு – 10 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன்
எண்ணெய் – 200 கிராம்
கொத்தமல்லித் தழை – இரண்டு கைப்பிடி அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் கொத்தமல்லியை,வெங்காயம், ப.மிளகாய், ஆகிய வற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு பின் அதனுடன் வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு கொஞ்சம் , நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, ,அரிசி மாவு, தேங்காய்த் துருவல்,எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து,கொள்ளவும்
கொஞ்சம் நீர்விட்டு சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை அடையாகத் தட்டவும்.கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி ஆடை தட்டினால் கையில் ஒட்டாது. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு தட்டிய அடையை கல்லில் போட்டு , அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும்சுவையான அடை ரெடி