எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் சர்வதேச அளவில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து நெதர்லாந்திற்கு கடந்த 23 ஆம் தேதி 20000 கன்டைனர்களுடன் ஐரோப்பிய நிறுவனத்திற்கு சொந்தமான எவர்கிரீன் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பக்கவாட்டில் குறுக்கே மோதி தரை தட்டி நின்றது. இது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழித்தடம் ஆகும்.
எவர்கிரீன் கப்பலின் விபத்தால் சூயஸ் நீர் வழித் தடத்தில் சுமார் 360க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் கால்நடைகள் போன்றவற்றைகளுடன் கூடிய கப்பல்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. ஆகையால் 12% வர்த்தகத்திற்கான பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் நீர் வழித்தடம் முற்றிலுமாக தடை பட்டுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகத்தில் 65 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த எவர்க்ரீன் கப்பலின் விபத்து பலத்த காற்று வீசியதால் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கச்சா எண்ணெயின் விலையும் உயர்வு ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர். கப்பல் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக கப்பல்களை வேறு திசையில் மாற்றி விடலாமா என்று யோசனை செய்யும் நிலையில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சுமார் 800 பேர் கப்பலை கரைக்கு நகர்த்தும் மீட்புப்பணி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சகதிகளை அகற்றுவதற்காக ராட்சத எந்திரங்கள் மற்றும் இலுவை படகுகளை கொண்டு எவர்கிரீன் ராட்சத கப்பலை கரைக்கு நகர்த்தி மிதக்க வைக்கும் பணியில் இரவு பகலாக மீட்பு பணியினர் பாடுபட்டு வந்தனர். இதன் பலனாக கடந்த திங்கட்கிழமை அன்று எவர்கிரீன் கப்பலை கரையிலிருந்து நகற்றி மிதக்க வைத்துள்ளனர்.
சூயஸ் கால்வாயின் ‘கிரேட் பிட்டர் லேக்’ என்ற பகுதியில் எவர்க்ரீன் கப்பலை நிறுத்தி வைத்துள்ளனர். கப்பல் விபத்தில் சிக்கிய நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட செலவுகள் மற்றும் நஷ்டங்கள் குறித்து கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி கிட்டத்தட்ட 100 கோடி டாலர்கள் செலவாகி உள்ளதாக கூறியுள்ளனர் இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இந்த விபத்து தொடர்பான முழு விவரம் கிடைக்கும் வரை கப்பல் கிரேட் பிட்டர் லேக் என்ற இடத்திலேயே இருக்கும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாக தலைவர் ஒசாமா ரபியா தெரிவித்துள்ளார். சூயஸ் கால்வாய் ஏற்பட்ட எவர்க்ரீன் கப்பலின் விபத்தினால் எகிப்த் அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 1.4 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.