சூயஸ் கால்வாயில், எவர்கிவன் கப்பல் மாட்டிக்கொண்டதற்கு இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
எகிப்தின் சூயஸ் கால்வாயில் பெரிய சரக்கு கப்பலான எவர்கிவன், கடந்த மார்ச் மாதத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டது. ஏறக்குறைய 7 நாட்கள் மீட்பு பணி நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சூயஸ் கால்வாய் ஆணையமானது, எவர்கிவன் கப்பல் நிறுவனத்திடம் 916 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரியது.
மேலும் இழப்பீடு தரும் வரை கப்பல் நகராது என்று தெரிவித்திருந்தது. அதன்பின்பு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் டாலர்களாக குறைத்துவிட்டது. இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கப்பல் நிறுவனமானது, எகிப்து நீதிமன்றத்தில் சுமுகமாக தீர்வு காண மேலும் 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. மேலும் சுமார் 150 மில்லியன் டாலர்கள் வழங்கவும் கப்பல் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.