Categories
உலக செய்திகள்

கனமழையிலிருந்து மீள்வதற்குள் அடுத்ததா..? பிரிட்டனை தாக்கப்போகும் அடுத்த புயல்..!!

பிரிட்டனில் கனத்த மழை மற்றும் புயல் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் எவர்ட் என்ற புயல் உருவாக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் கனத்த மழை பெய்து லண்டனை மொத்தமாக புரட்டிப்போட்டது. இதில் மருத்துவமனைகள் உட்பட பல பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Northamptonshire என்ற பகுதியில் நேற்று கல்மழை பெய்தது. இதனால் வாகனத்தில் இருக்கும் அலாரங்கள் தானாகவே நீண்ட நேரம் ஒலி எழுப்பிக்கொண்டு இருந்துள்ளது. மேலும் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 35 மில்லிமீட்டர் அளவில் மழை கொட்டியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் எவர்ட் என்ற புயல் உருவாக உள்ளது. எனவே வானிலை ஆய்வாளர்கள் இதனால், ஒரு மணி நேரத்திற்கு 75 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று கூறியுள்ளார்கள். இப்புயல் தொடங்கியதிலிருந்து, மறுநாள் வரைக்கும் பலத்த காற்று மற்றும் கனமழை தாக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |