சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5ஆவது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (40). அவரது மனைவி பஞ்சவர்ணம் (35). இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இதுபோன்று இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்பச் சண்டை நடந்துள்ளது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார்.
இதனையடுத்து எரியும் உடலுடன் பஞ்சவர்ணம் தெருவில் ஓடியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்தனர்.பின்னர், ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, பஞ்சவர்ணம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பஞ்சவர்ணத்தின் கணவர் ராஜனை கைது செய்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.