Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே C.M ஸ்டாலினை…. பாராட்டுறாங்க… போற்றுறாங்க…. பொறுத்துக்க முடியாமல் பதட்டத்தில் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்…  அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி  ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது.

பொதுவாக சென்னை ஒரு பெரு மழையை சந்தித்திருக்கிற பொழுது,  அந்த பெரு மழையை மிக சாதுரியமாக,  மிக தைரியமாக , சிறப்பான நடவடிக்கைகளாக எடுத்து, மழைநீர் தேங்காத வகையிலே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு,  எல்லோருடைய பாராட்டுகளையும்… குறிப்பாக தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய நிலையில்,  அந்த பாராட்டுகளை… அந்தப் போற்றுதல்களை… அந்த நல்ல எண்ணத்தை…

பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி மனத்தோடு,  நம்முடைய எதிர்கட்சி தலைவர் அவர்கள் ஆளுநரை சந்தித்து தன்னுடைய முறையீடுகளை வைத்திருக்கிறாரா, என்று நான் நினைக்கிறேன். பொதுவாக அவர் சொல்லி இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்க்கும் பொழுது,  எந்த இடத்திலும் அவர்  ஆதாரத்தோடு,  குறிப்பிட்டு இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. ஆதாரங்கள் ஏதும் இன்றி பொத்தாம்பொதுவாக ஆளுநரை சந்தித்து குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு போயிருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |