Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேலைக்கு செல்வோருக்கு மகிழ்ச்சி…! அரசு சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் 100% பணியாளருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அம்சங்களில் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ போக்குவரத்துக்கு 7 தேதி அனுமதி முதல் அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு மின்சார ரயில் சேவை களுக்கு தடை விதித்துள்ளது.

பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன்  இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்கள் செல்லும் வெளியூர் பயணிகள் கண்டிப்பாக இ-பாஸ் உண்டு எனவும் அரசு தெரிவித்துள்ளது. சினிமா சூட்டிங் அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 100 செய்த பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். வங்கி மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே  இ-பாஸ் முறை ரத்து செய்யப்படும். செப்டம்பர் 30ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |