Categories
சினிமா தமிழ் சினிமா

1இல்ல… 2இல்ல… 3கேள்வி கேட்ட தொகுப்பாளர்…. தளபதி சொன்ன நச் பதில்..!!

நேற்று நடந்த ‘வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ரம்யா, விஜயிடம் தளபதி என்றாலே உங்களின் நடிப்பு போதை, சிரிப்பு போதை, நடனம் போதை, ஸ்டைல் என எல்லாமே எங்களுக்கு போதை. இப்படி தளபதிக்கு எந்த விஷயத்தில் போதை என கேள்வி கேட்டபோது, அதற்கு விஜய் உடனடியாக ரசிகர்கள் பக்கம் கையை நீட்டினார். ரசிகர்கள் தான் எனக்கு போதை என தெரிவித்தார்.

30 வருட திரை வாழ்க்கையில் பல போட்டிகள், பல இன்னல்கள், பல நெருக்கடிகள் திரையில் என சந்தித்த வருகின்ற நிலையில் அதை எப்படி சமாளிக்கின்றீர்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு,  விஜய் ஒன்று பழகி போய்விட்டது, இரண்டாவது பிரச்சினைகள் வருகின்றது, எதிர்ப்புகள் வருகின்றது. அப்ப நம்ம கரெக்டான ரூட்டில் தான் போய்க்கொண்டிருக்கின்றோம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்புகளும் தான் நம்மள ஓட வைக்கிறது என தெரிவித்தார்.

எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் வெற்றி மேல் இருந்த பயத்தால் நானும் ஓட ஆரம்பித்தேன். நான் போகும் இடத்திற்கு எல்லாம் அவரும் வந்து நின்னாரு. நான் இந்த அளவிற்கு வளர காரணமாக இருந்தாரு. அவரை தாண்டும் முயற்சியில் நானும் போட்டி போட்டுக் கொண்டே இருந்தேன். அந்த மாதிரியான போட்டியாளர் உங்க வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.

அந்த போட்டியாளர் உருவான வருடம் 1992. அந்த போட்டியாளரின் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்கணும் என்ற எண்ணம் இருக்கிற அனைவருக்கும் போட்டியாளர் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் நீங்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்க தான் எதிரி, நீங்க தான் போட்டி. நீங்க அடுத்தவங்கள அந்த மாதிரி பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |