Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாருமே இதை செஞ்சா…. என்ன மதம் ? என்ன ஜாதி ? பிறந்த நேரம் ? என்ன ஜாதகம் ? என கேட்க மாட்டாங்க – நடிகர் விஜய் சூப்பர் அட்வைஸ் …!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நம்ம மன்றத்தைச் சேர்ந்த நண்பர்கள் நிறைய ரத்ததானம் செய்து வருகின்றீர்கள். ரத்த தானம், ஆப் இதையெல்லாம் நான் ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ரத்தத்திற்கு மட்டும் தான்  ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம், ஆண்-பெண் என்ற வித்தியாசம், உயர்ந்த ஜாதியா-தாழ்ந்த ஜாதியா என்ற வேறுபாடு இருக்காது. அதிலும் குறிப்பாக இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடு சுத்தமாக கிடையாது. ரத்தம் ஒரே வகையாக இருந்தால் போதும். ரத்த தானம் செய்ய வருபவர்களிடம் என்ன மதம்? என்ன ஜாதி? நீ பிறந்த நேரம்? என்ன ஜாதகம்? என கேட்க மாட்டாங்க.

மனிதர்களாகிய நாம் தான் இப்படி பேசி பிரித்து பார்த்து வாழ்ந்து பழகிட்டோம். ஆனால் ரத்தத்திற்கு இதெல்லாம் கிடையவே கிடையாது. இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் இந்த ஒரு நல்ல விஷயத்தை நாம் இரத்தத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காகத்தான் நான் இதை ஆரம்பித்தேன். இந்த ஆப்பில் இதுவரை 6,000 பேர் ரத்த தானம் செய்பவர்களாக இணைந்துள்ளார்கள். அதில் 2000 பேர் ரத்த தானம் செய்துள்ளார்கள். எல்லாரும் நம்முடைய நண்பர்கள் தான். நல்லாருப்போம் நல்லாருபோம் எல்லாரும் நல்லா இருப்போம்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் அவரே என்னுடைய மன்றத்தின் தலைவர் என கூறலாம். என்னை வழிநடத்துபவர் என்னை என்ன வேணாலும் சொல்லலாம். அது ஆனந்த் சார். மன்றத்தைச் சேர்ந்த என்னுடைய நண்பர்கள்தான் முழுக்க முழுக்க காரணம். இது மாதிரி ஒரு குறுதியகமோ விடுதியகமோ விலையில்லா விருந்தகமோ என இதெல்லாம் தொடங்க வேண்டும் என சொல்றதுண்டு. ஆனால் அதை எல்லாம் செயல்படுத்துவது நடைமுறைப்படுத்துவது அவங்க தான் சார் சொன்ன மாதிரி அவங்களுக்கு தான் இந்த பெயர் போகும். பிடிச்சிருந்தா எடுத்துக்கோங்க இல்லன்னா விட்டுருங்க. மறுபடியும் வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய நன்றிகள் என தெரிவித்தார்.

Categories

Tech |