Categories
உலக செய்திகள்

38,020 பேர்….! ”எல்லாரையும் அனுப்பிட்டோம்” கடைசி ஆள் இதான் – சீனா மகிழ்ச்சி ..!!

வூஹானிலிருந்து அனைத்து கொரோனா தொற்று நோயாளிகளும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது

கொரோனா தொற்றின் பிறப்பிடமாக அமைந்தது சீனாவின் மத்திய நகரமான வூஹான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் 200 க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் 82830 பேரை தாக்கி 4633 மரணமடைந்தனர்.  77,944  தீவிர சிகிச்சை கொடுத்ததை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

727 பேர் சீனாவின் பல்வேறு இடங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களில் ஒருவரான டிங் வூஹான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர். இவர்தான் வூஹான் நகரின் கடைசி கொரோனா தொற்று நோயாளி. டிங் குணமடைவதாக தெரிந்த பின்னர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வூஹான் நகரில் 38020 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இப்போது ஒருவர் கூட மருத்துவமனையில் இல்லை என்பது அந்நகருக்கு ஒரு மைல் கல் என்று சொல்லலாம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தாகவே அமைந்துள்ளது என அங்கு இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வூஹான் நகரை கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்து 76 நாட்கள் கழித்து ஊரடங்கு நீக்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக அந்நகரில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. தங்களது இயல்பு வாழ்க்கைக்கு அந்த மாகாணம் திரும்பியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் 98.2 சதவீத பணியாளர்கள்பணியை  தொடங்கிவிட்டனர். பள்ளிகளும் விரைவில் திறக்கப்பட உள்ளன.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |