கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நான்கு நாளைக்கு முன்பாக நான் கோயம்புத்தூருக்கு வந்தேன். விமான நிலையத்திலிருந்து அரசினர் விடுதி செல்கின்ற வரையில அதே இரவு 8 மணி அளவில் புறப்பட்டு, விடுதிக்கு செல்லனும்னா கூட பத்து நிமிஷம், 15 நிமிஷத்துல போயிறலாம். ஆனால் மக்கள் தந்த வரவேற்பை நான் பெற்றுக் கொண்ட சென்ற காரணத்தினால், ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆச்சு, நான் போய் சேர்வதற்கு.
போகிற வழியெல்லாம், சாலைகளில் இரு புறங்களிலும் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆக எல்லா தரப்பு மக்களும் இரு புறங்களிலும் நின்று கொண்டு, என்னை வாழ்த்தி வாழ்க வாழ்க என்று கோஷமிட்டு, அதே நேரத்தில் ஆங்காங்கே ஒரு சிலர் மனுக்களையும் கொடுத்து, எப்போதும் சில பேர் மனுக்களை கொடுக்கும் போது கொஞ்சம் ஏக்கத்தோடு, கொஞ்சம் வருத்தத்தோடு, கொடுக்கிற மாதிரி பார்த்திருக்கிறேன். ஆனால் என்னிடம் மனு கொடுக்கும் போது, மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு, அதுவும் கொடுத்துட்டு நன்றி, நன்றி என்கிறாங்க.
ஏதாவது முடிச்சிட்ட மாதிரி சொல்றாங்க. மனு கொடுத்துட்டா பிரச்சனை முடிஞ்சிடும்ன்னு நம்பிக்கை மக்களிடத்திலேயே வந்து இருக்குன்னா, அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஒரு பயணத்தை நடத்தினேன்.அந்தப் பயணத்தை நடத்தும் போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் நேரடியாக வந்து மனுக்களை கொடுக்கலாம். மேடையிலே ஒரு பெட்டி வைத்திருப்போம்.
அந்த பெட்டியில் இந்த மனுக்கள் எல்லாம் போடப்படும். நேரடியாக வந்து மனுக்களை கூட போடவேண்டிய அவசியம் இல்ல. வருகின்ற வாசலில், நுழைவாயில்ல கிட்டத்தட்ட 100 இளைஞர்கள் டேபிள் போட்டு, சேர் போட்டு ரிஜிஸ்டர் பண்ணி, அதற்கு எல்லாம் பெற்றுக்கொண்டு, அதற்குப் பிறகுதான் அந்த பெட்டிக்கு வந்து சேர்ந்தது. அந்த பெட்டியை அந்த மக்களுக்கு முன்னாலையே அதை, பூட்டி ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள்ளாகவே இவையெல்லாம் தீர்த்து வைக்கிற முயற்சி நான் ஈடுபடுவேன் என்று உறுதி தந்தேன்.