Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொருவரும் ஒரு விதமா பேசுறாங்க…! நீங்க தான் முடிவெடுக்கணும் …!!

10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது.

10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அரசு ஆவணம் செய்து. வருகின்றது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தான் இந்த ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது. ஆலோசனை கூட்டம் சுமார் அரை மணிநேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விரிவான அறிக்கையை கொடுப்பார் அல்லது செய்தியாளர்கள் சந்திப்பு என்று எதிர்பார்க்கபடுகிறது.

பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் ? என்றால் மாணவர்கள் எங்களது ஊரிலிருந்து இ பாஸ் கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்றும், மாணவர்கள் சார்பில் படித்ததை மறுபடியும் படித்ததற்கான நேர அவகாசம் போதவில்லை என்று சொல்கிறார்கள். கல்வியாளர்கள் சார்பில் தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை போன்ற வட மாவட்டங்களில் அதிகமாக இருக்கக்  கூடிய நிலையில் தேர்வை தள்ளி வையுங்கள் என்று தெரிவிக்கிறார்கள் எனவே இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்படுகின்றது.

Categories

Tech |