Categories
அரசியல் மாநில செய்திகள்

“எல்லோரும் களத்தில் குதிங்க”….. அனல் பறக்கத் தீயா வேலை நடக்கட்டும்….. நிர்வாகிகளுக்கு டிடிவி ஆர்டர்….!!!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை  தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 12, 13, 26, மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை சரியாகவும், அக்கறையோடும் பயன்படுத்திக் கொண்டு அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு உள்ளிட்ட கழகப் பகுதிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் புதிய வாக்காளர் பட்டியல் சேர்ப்பு பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக இந்த பணிகளை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கழக செயலாளர்கள் முழு வீட்டில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |