Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை எல்லாரும் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும்… இல்லையென்றால் கடும் நடவடிக்கை… அபராதம் வசூலித்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை நாமே காக்கும் ஒரு கவசமாக முகக்கவசம் இருந்து வருகின்றது. இதுகுறித்து சுகாதார துறையினர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை கூறியும் சிலர் எவ்வித அச்சமும் இன்றி முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மண்டலா துணை தாசில்தார் சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் நவீன்குமார், ஜெயக்கொடி மற்றும் அதிகாரிகள் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் கடைக்கு வரும் வடிக்கையாளர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |