Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அனைவருக்கும் பணம் தேவை” கபில் தேவ் புரிந்துகொள்ளவில்லை – அக்தர் பதிலடி

இந்தியாவிற்கு பணம் தேவையில்லை என கபில்தேவ் கூறியதற்கு அனைவருக்கும் பணம் தேவை என அத்தர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் நல நிதி திரட்ட முடியும் என முன்னாள் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் அத்தர் பரிந்துரைத்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், இந்தியாவிற்கு பணம் தேவை இல்லை தற்போது இருக்கும் சூழலில் கிரிக்கெட்டை விட நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து கபில் தேவின் கருத்திற்கு அக்தர் கூறியிருப்பதாவது, “நான் சொல்வதை கபில் தேவ் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. தொற்றின் காரணமாக பொருளாதாரரீதியாக நாம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனை சரி செய்யும் விதமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தி நாம் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது. பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்.

இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கு நிச்சயம் ரசிகர்கள் அதிகம் வருகை தருவார்கள். இதனால் ஒரே போட்டியில் அதிக அளவு நிதியை திரட்ட முடியும். கபில்தேவ் அவர்கள் பணம் தேவையில்லை எனக் கூறி இருந்தார் ஆனால் அனைவருக்கும் பணம் தேவை உள்ளது. ஆகவே எனது பரிந்துரை பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன். அதிகளவு நிதியை திரட்ட இதைத் தவிர வேறு வழி இல்லை அதோடு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவிலும் இந்த தொடர் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற நோக்கத்தில்தான் நான் இதனைக் கூறினேன்” என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |