இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்றாலும் இந்திய அணி கடைசி வரை போராடி எங்களின் அன்புக்கும் , மரியாதைக்கும் தகுதியுடையவர்கள். என்று ராகுல் காந்தி தந்து ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Though they’re a billion broken hearts tonight, Team India, you put up a great fight and are deserving of our love & respect.
Congratulations to New Zealand on their well earned win, that gives them a place in the World Cup final. #INDvNZ #CWC19
— Rahul Gandhi (@RahulGandhi) July 10, 2019