Categories
தேசிய செய்திகள்

எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு…. நாம் ஒன்றாக போராட வேண்டும்…. பிரதமர் மோடி அழைப்பு …!!

காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒன்றாக போராட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் நமது கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று என்றும், காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சிமாநாட்டில், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த, கோடிக்கணக்கான செல்வில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

Categories

Tech |