அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறியில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகின்ற, யாருக்கும் துரோகம் செய்கின்ற மனநிலையில் உள்ள ஒரு மனிதர், அவரைச் சேர்ந்த ஒரு கூட்டம். அம்மாவின் இயக்கத்தை இன்றைக்கு எப்படி சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் சுபாவத்தை உணர்ந்துதான் அன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாம் ஆரம்பித்தோம். அம்மாவின் தொண்டர்களுக்கு ஒரு இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இன்னும் பல தொண்டர்கள், உண்மையான தொண்டர்கள் தலைவரின் கட்சி, அம்மாவின் கட்சி, புரட்சித் தலைவர் அம்மா அவர்களின் வெற்றி சின்னம் அங்கு இருக்கின்றது என்று அதை விட்டு வர முடியாமல் இருப்பவர்கள், இன்றைக்கு அங்கு நடைபெறுகின்ற கூத்தை எல்லாம்….
என்னிடம் வேறு கட்சியை சேர்ந்த நண்பர் சந்திக்க வரும் போது சொன்னார்… ஒரே நாளில் அந்த பொதுக்குழுவில், லைவ் வேற போட்டு அவர்களுடைய தன்மையை, குணாதிசயத்தை, அவர்களின் பதவி வெறியை, அவர்களின் சுயநலத்தை அன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தொலைக்காட்சியிலே அவர்கள் ஒளிபரப்பி விட்டார்கள். இவர்களுக்கா ? நாம் வாக்களித்தோம் என்று தமிழ்நாட்டு மக்கள் இவர்களிடம் தான் இரட்டை இலை இருக்கிறதா ? என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள் என்று சொன்னார்கள் என டிடிவி தினகரன் பேசினார்.