மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
மத்திய பிரதேஷ மாநில காங்கிரஸ் அரசு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத் , இங்கு நடந்து கொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள். உண்மை வெளிவரும். எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருப்பதன் பின்னணியில் உள்ள உண்மைகள் மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார். இதையடுத்து தனது ராஜினாமா கடித்ததை முதல்வர் கமல்நாத் ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு அனுப்பினார்.
அந்த கடிதத்தில் “கடந்த இரண்டு வாரங்களாக மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை” என்று தெரிவித்தார். இதனால் மத்திய பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸின் பலம் 86 ஆகக்குறைந்தது. 107 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.