அனிருத் தனது சம்பளத்தை உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனயடுத்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம், டான், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் சூப்பரான பாடல்களை மற்றும் பின்னணி இசையையும் வழங்கி இருந்தார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்’ திரைப்படத்திற்கும் இவர் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் ஹிட் அடிப்பதால் தற்போது இவர் தனது சம்பளத்தை உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் பெரிய படங்களுக்கு தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.