Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாமே கையிருப்பில் உள்ளது, யாரும் பயப்படாதீங்க – நம்பிக்கை அளித்த முதல்வர் …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக காய்கறிகள் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது.  கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 32,000 படுக்கைகள் உள்ளன.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 19 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் நிலையில் உள்ளது. மூன்றாம் நிலைக்கு செல்ல விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் குடும்பத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை நடத்தப்படும். கொரோனா பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களை சுற்றி உள்ளோருக்கும் பரிசோதனை நடத்தப்படும்.

Categories

Tech |