Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாமே நாளைக்கு வந்துரும், சீனாவுக்கு கிளம்பிய இந்திய விமானம் ….!!

சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து வர ஏர்  இந்தியா விமானம் சென்றுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகின்றது. இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் பரிசோதனையை அதிகப்படுத்தன் விளைவாகவே அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் மூலம் கட்டுக்குள் இருக்கிறது.

இதனால் கொரோனா இருக்கின்றதா இல்லையா என்று 30 நிமிடத்தில் பரிசோதிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை  சீனாவில் இந்தியா வந்த ஆர்டர் செய்தது. முதல் கட்டமாக 6 லட்சத்து 50 ஆயிரம் கிட்டுகள் வந்த நிலையில் மேலும் ஆர்டர் செய்த கிட்டுகளை எடுப்பதற்கு ஏர் இந்தியா விமானம் இன்று சீனா விரைந்தது. இது நாளை மருத்துவ உபகரணங்கள்,  செவிலியருக்கு பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு ஆடை உள்ளிட்டவற்றை சீனாவில் இருந்து எடுத்து இந்தியா வரவுகின்றது. ஏர் இந்தியா B-787 விமானம் எடுத்து வரும் கிட்டுகளை  பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கின்றது.

Categories

Tech |