ஹைதராபாத் தெலுங்கானாவில் ஏழை மக்கள் நலன் கருதி நோய் கண்டறியும் சோதனை மையங்களை அரசு தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் மாநிலம் தெலுங்கானாவில் ஏழைகள் நலன் கருதி நோய் கண்டறியும் சிறிய சோதனை மையங்களை அரசு திறந்துள்ளது. அதில், அல்ட்ராசோனோகிராபி (யு.எஸ்.ஜி) போன்ற முக்கிய நோயறிதல் சேவைகள், எக்ஸ்-ரே போன்ற கதிரியக்க சேவைகள், ஈ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராபி) போன்ற அடிப்படை இருதய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
இதுகுறித்து அமைச்சர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் ‘பாஸ்தி தவகானா’ திட்டத்தின் மூலம் பல்வேறு ஏழை எளிய மக்கள் தரமான சிகிச்சையை இலவசமாக பெற்று வருகின்றனர். இருப்பினும் நோய்களை அறிவதற்கான சோதனைகளை செய்ய நோயாளிகளிடம் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதனை எடுப்பதற்கு ஏழை மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இக்காரணத்தால் இந்த புதிய முன்னேறி நோய் கண்டறியும் சோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இன்று எட்டு மையங்கள் திறக்கப்பட்ட நிலையில் வரும் நாட்களில் இதனை பெருக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.