இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு எல்லையில் இரண்டு நாடுகளும் சிறந்த அளவில் பிரச்சினையை கையாண்டு வருகின்றனர்
கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லை படையினரும் சீன எல்லை படையினரும் கடந்த 5ஆம் தேதி மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இந்திய சீன உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்டு படைகள் பின்வாங்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இந்திய-சீன ஜெனரல் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எல்லையில் முன்னர் இருந்த நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் செய்யவேண்டும் என்றும் இந்திய பகுதிகளிலிருந்து சீன ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் “கலவரம் தொடர்பான தெளிவான தகவல்கள் என்னிடம் அதிக அளவில் இல்லை. ராணுவ வழிமுறை தூதரகம் வழிமுறை மூலமாக இரண்டு நாடுகளும் எல்லை பிரச்சனையை சிறந்த அளவில் கையாண்டு வருகின்றன. இந்தியா-சீனா இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் எல்லையில் இருக்கும் பதற்றத்தை குறைக்க இரண்டு நாடுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என கூறினார்.
இதனிடையே இவ்விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்த பொழுது “கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற இந்திய சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இரண்டு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு பிரச்சினைக்கான தீர்வை கண்டறிய முடிவு செய்யப்பட்டது. எனவே பிரச்சனையை விரைந்து முடிக்கவும், அமைதியான சூழலை எல்லையில் கொண்டு வரவும் இரண்டு நாடுகளும் தூதரக ரீதியிலான மற்றும் ராணுவ தொடர்பைக் மேற்கொண்டு வருகின்றது. இருதரப்பு உறவுகள் உறவுகளின் வளர்ச்சிக்கும் இது அவசியமானது” எனக் கூறினர்