சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ரூம்’ திரைப்படத்தின் கதையில் பல காட்சிகள் பாத்ரூமுக்குள்ளேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ், அஸ்வின் கே. வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் திரைக்கதையில் உள்ள ஹைலைட் என்னவென்றால் பெரும்பாலான காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள்ளேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டு இருப்பதுதான்.அந்தவகையில் தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘ரூம்’. இது, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.