10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 46.37 லட்சம் இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால அதற்குரிய விளக்கத்தை ஜூன் 11 க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.ஆகவே இன்னும் இருபது நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதில், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அந்தப் பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.மேலும்,நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதி மாணவர்கள் வெளியே சென்றுவர ஹால்டிக்கெட் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். பிறமாநில, மாவட்டத்திலிருந்து பயணிக்கும் மாணவர்கள் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுதுவர்.
சிறப்பு தேர்வு மையங்கள் சென்றுவர ஆசிரியர் மாணவர்களுக்கு தனியாக பேருந்து வசதி செய்யப்படும். வகுப்பறைக்கு 10 மாணவர்களுடன் தனி அறையில் தேர்வு எழுதுவார்கள், முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படும். தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் என 46.37 லட்சம் மாஸ்க் இலவசமாக வழங்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளார்.