Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாம் ரெடியா இருக்கு… வழக்கம் போல பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து துறை அதிகாரி தகவல்…!!

ராமநாதபுரத்தில் நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து மாவட்டத்தில் 112 நகர பேருந்துகள், 163 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 275 பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன. மேலும் முக்கியமாக பேருந்துகளில் 50 சதவீத பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து துறை அதிகாரி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளையும் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நாளை வழக்கம் போல  பேருந்துகள் இயக்கப்படும் எனவும், கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் நெரிசலை தவிர்க்க அதிக பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |