Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உங்களுக்காக தான் எல்லாம் செய்றோம்… ரெடியாகும் சாமியான பந்தல்… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணி மிகவும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. அதன்படி அடிப்படை வசதிகளான மின்சார வசதி, வாக்குத்தத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், வாக்காளர் வந்து செல்லும் வழி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்களிப்பின் போது எத்தகைய பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |