மதுரையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் எந்த மாதிரியான கொரோனா கேஸ் அதிகமாக வருது. சமூக சுகாதாரத்துறை துறை, பொது மருத்துவத் துறை இணைந்து Rapid response team ( ராபிட் ரெஸ்பான்ஸ் டீம் ) உருவாக்கியுள்ளோம். மதுரைல எவ்வளவு கேஸ் இருக்கு, எவ்வளவு அறிகுறியுடன் இருக்கு ? எவ்வளவு அறிகுறி இல்லாம இருக்கு ? எந்த மாதிரியான அறிகுறி இருக்கு, ஆண் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர், எதற்கு இறப்பு நடக்குது என்று ஆய்வு செய்தோம். மாவட்ட ஆட்சியர் கூட ஒரு மருத்துவர் விரிவாக ஆய்வு செய்தனர். இது புது வைரஸ். நம்ம மருத்துவக்குழு ஆராய்ச்சி அடிப்படையில் கிடைக்கும் தகவலை வைத்து நல்லபடியா சிகிச்சை கொடுக்கிறார்கள். மதுரையிலிருந்து 523 பேரை நல்ல முறையில் குணப்படுத்த இருக்கிறாங்க.
பிற நோய்கள் இருக்கக்கூடிய பலபேரை High flow oxygen_னுடன் குணப்படுத்தியுள்ளார்கள். இது பாராட்ட வேண்டியது.மதுரையில் 500 படுக்கை இருக்க கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் எடுத்தோம். அதுல 150 படுக்கை ICUவுடன் இருந்தது. இன்னைக்கு ஆயிரத்து நாநூறு படுக்கைகளுடன் தயார் நிலையில் இருக்கின்றோம். மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் 1,400 பெட்டில் 150 ICU வெண்டிலேட்டருடன் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு போதுமான அளவு வெண்டிலேட்டர் வைத்திருந்தாலும், வெண்டிலேட்டர் எல்லாருக்கும் தேவைப்படக்கூடிய நிலை இல்லை. High flow oxygen ரொம்ப தேவை படுது. அதனாலதான் நம்ம ஒவ்வொரு இடத்திலும் ஸ்ட்ரெச்சர், ஆக்சிஜன் வைத்துள்ளோம். வீல் சேர்- ஆக்சிஜன் என மே ஹெல்ப் யூ டிஸ்க் போட்டு முழுகவச பாதுகாப்பு உடையோடு நோயாளிகளை அணுகுகின்றோம்.
மதுரை மாநகராட்சியில் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் போய் ILI கேஸ் இருக்கா ? சாதாரண இருமல் இருக்கா? சாதாரண காய்ச்சல் இருக்கா ? எதாவது தொண்டை வலி இருக்கா ? என்று கதவை தட்டி கேட்க கூடிய நிலையை உருவாக்க நடமாடும் மருத்துவக் குழுக்களை போட்டுள்ளோம். அப்படி கேட்பதனால் அவர்களை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும். புதிதாக கவுன்சிலிங் சென்டர் உருவாக்கி, நாளை முதல் செயல்படும். மனநல மருத்துவர்கள் தலைமையில் குழு அமைத்து யாருக்கெல்லாம் மருத்துவமனையில் பாசிட்டிவ் இருக்கின்றதோ, அவர்களை தொடர்பு கொண்டு பேசுவாங்க. கண்ட்ரோல் ரூம் நம்பருக்கும் யாரு வேண்டுமானாலும் பேசலாம்… மனநல மருத்துவர்கள் பதிலளிப்பார்.
கொரோனா நமக்கு வந்துடுச்சுனு பயம் வேண்டாம். உங்களை காப்பதற்கு அரசு இருக்கின்றது. முதலமைச்சர் இருக்கிறார், அமைச்சர்கள் இருக்கிறார்கள், மருத்துவக்குழு தயாராக இருக்கு எனவே பொதுமக்களுக்கு பயம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி கடமைப்பட்டுள்ளேன். தாலுகா அளவில் 400 படுக்கை வசதிகள் வைத்துள்ளோம். மொத்தம் 1 800 படுக்கைகள் ரெடியாக இருக்கு. கேர் சென்டர்ல 2040 பெட் இருக்கு, தேவைப்பட்டால் அதிகரிக்க சொல்லி இருக்கின்றோம். ஆக்சிஜன் இருக்கு, திரவநிலை ஆக்சிஜன் 2 டங்கு ஏற்கனவே வைத்துள்ளோம். தோப்பூர் மருத்துவமனையில் 6000 லிட்டர் வைத்துள்ளோம்.
மதுரையை பொருத்தவரைக்கும் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள், மருத்துவ அலுவலர்கள், பாரா மெடிக்கல் ஸ்டாப், டெக்னீசியன் ஸ்டாப் போன்ற எல்லா கட்டமைப்பும் இன்னும் கூடுதலாக கேட்டுள்ளார்கள். தேவைப்படுகின்ற பணியாளர் நியமனம், தேவை படுகின்ற எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றோம். பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம். அதே நேரத்தில் மிகுந்த கவனத்தோடு, மிகுந்த எச்சரிக்கையோடு பொதுமக்கள் ஒத்துழைப்போடு இருக்கணும். பொதுமக்கள் ஒத்துழைப்போடு தான் இதனை நாம் எதிர்கொள்ள முடியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.