Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK காரங்க வாயில எல்லாம் சனி.. பேசியே கெடப்போறாங்க..! வெளுத்து வாங்கிய Sellur Raju..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலினிடம் – ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகிற மாதிரி ஒரு போட்டோ போஸ் கொடுங்க என சொல்லுறாங்க. உடனே முதல்வர் குழந்தைக்கு சாப்பாட்டை எடுத்து, அப்படி ஊட்டி விடுகிறார். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எவ்வளவு அழகா வந்திருக்கு ( போட்டோவில்)  அப்படின்னு சொல்றீங்க…

எப்பா எல்லா பேப்பர்லயும் வந்துருச்சு, டிவிலையும் வந்திருச்சு, அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்தப் பிள்ளையோட எச்சி முதல்வர் கையில் பட்டுவிட்டதாம். குழந்தையின் எச்சிபட்டத்தை பிஸ்லரி வாட்டர் ஊத்தி கழுவுறாரு. என்னையா நியாயம் ? உங்களுக்கும்,  மக்களுக்கும் என்னையா நியாயம் என செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி நிகழ்வுலையா குறிப்பிட்டு விமர்சித்தார்.

நம்ம பொன்முடி ஓசி பயணம் என சொல்லுறாரு. பெண்கள் ஓசி  பயணம் போறாங்க அப்படின்னு சொல்லி, இன்னைக்கு பாத்தீங்கன்னா… பெண்களை கேவலப்படுத்தறாங்க. நம்ம பொன்முடி சொல்றாரு… ஓசில இங்கே இருந்து இதுக்கு போறீங்க, கோயம்பேடு போறீங்க அப்டினு சொன்னாரு. அதற்க்கு மக்கள்  நல்ல சூடு கொடுத்து இருக்காங்க. எங்கள் ஓட்டை வாங்கிட்டு, நீங்க ஓசி என்று சொல்லுவீங்க, எப்படியும் பேசுவீங்கன்னு… மக்கள் எல்லாம் அருமையாக பேட்டி கொடுத்து இருக்காங்க. இவங்க வாயில எல்லாம் சனியன் போய் உட்கார்ந்திருச்சு என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |