”இந்தியாவில் 3-வது அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் .
பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார்.
3_ஆவது அணியை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து வரும் சந்திரசேகர் ராவ் பல்வேறு மாநிலங்களின் பிரதான கட்சிகளின் முதல்வர்களை சந்தித்து வருகின்றார். கடந்த வாரம் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த அவர் நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள முக.ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர் .இதில் திமுக_வின் TR.பாலு , துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள சூழலில் தேசிய அரசியலின் மாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதமாக மாறியது. சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தி.மு.க. சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் , தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்றும் சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார் எனவும் கூறினார் .மேலும் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறினார் .”இந்தியாவில் 3-வது அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என்றும் தெரிவித்தார்.