மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார்.
அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி சண்முகம் அவர்களும் உடன் இருந்திருக்கிறார்கள். எனவே அதிமுக கட்சியின் முக்கியமான அடுத்தடுத்த நகர்வுகள் குறித்த விஷயங்கள் பேசப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகின்றது.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு, ஊழல் புகார்கள் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் இந்த சந்திப்பில் புகாராக வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நிச்சயமாக பேசப்பட்டிருக்கும். அடுத்தடுத்து நடக்கக்கூடிய நிகழ்வுகள், பாரதிய ஜனதா கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அலசப்பட்டிருக்கும்.
அரசு கோப்புகள் ஏராளமானவையை எடப்பாடி பழனிசாமி எடுத்துச் சென்றதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் முக்கியமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக இப்படியான புகார்கள் கொடுக்கும் பட்சத்தில் மத்திய அரசு சார்ந்த விசாரணை அமைப்புகள், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
எனவே முக்கியமான ஊழல் விகாரங்கள் சம்பந்தமாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் விசாரணைக்கு இவர்கள் கூறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்வது போன்றவை எல்லாம் நடந்து வரக்கூடிய சூழலில் அதற்கு பதிலடி அவர்களுக்கு கொடுக்கும் வகையில், தற்போது சிட்டிங்கில் இருக்கக்கூடிய அமைச்சர்களுடைய முறைகேடு சம்பந்தமான புகார்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவலாக கிடைத்திருக்கின்றது.