Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எவ்ளோ கஷ்டத்தை சமாளிக்கிறது… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கள விநாயகர் கோவில் பகுதியில் காசிலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் நான்காவதாக பிறந்த தமிழ்ச்செல்வி என்பவர் பிறக்கும் போதே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் நடக்க முடியாமல் பிறந்துள்ளார். இவரை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ராசையா என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்செல்விக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதால் தமிழ்ச்செல்வி அவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டிலே வசித்து வந்துள்ளார்.

இதனால் தமிழ்ச்செல்வியின் தந்தை அவருக்கு தனது வீட்டு பக்கத்திலேயே ஒரு குடிசையை  அமைத்து அங்கு அவருக்கு பெட்டிக் கடை ஒன்றை  வைத்து கொடுத்துள்ளார். இந்த பெட்டிக்கடையில் வரும் வருமானத்தில் தமிழ்ச்செல்வி தனது குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தனது பெட்டிக் கடையை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த போது இருட்டாக உள்ளது என மின்விளக்கு போடுவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது தமிழ்ச்செல்வியின் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் மயங்கிக் கிடந்த தமிழ்ச்செல்வியை  உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழ்ச்செல்வியை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |