கோவிலுக்குள் சென்றதும் பக்தர்கள் சில பேர் முககவசம் அணியாமல் சுற்றி திரிவதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கின்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் வாசலில் பக்தர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால் கோவிலுக்குள் சென்றதும் சில பேர் முக கவசங்களை கழற்றி வைத்து சாதாரணமாக சுற்றி திரிகின்றனர். எனவே கோவில் மட்டுமின்றி அனைத்து பொது இடங்களிலும் இதுபோன்று நடந்து கொள்ளும் பொதுமக்களால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருக்கும்.