சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் சிலர் சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியில் சுந்தரம், வெங்கடேஷ், முனியாண்டி, பரஞ்சோதி போன்றோர் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.