தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது குறித்து 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகில் ஞானபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் ஞானப்பிரகாஷ் வீட்டின் முன்பகுதியில் 3 நபர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஞானப்பிரகாஷ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் இதுகுறித்து காவல்துறையினர் தியாகராஜன், பிரவின், ராஜ்குமார் போன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.