உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது “உயர்கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது.
சென்னை மாநில கல்லூரியில் செவி திறன் குறைபாடு இருப்பவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு இப்போது துவங்கப்பட்டுள்ளது. Ews ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு நாளை அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்ட இருக்கிறது. திமுக சார்பாக மறு சீராய்வு செய்யப்படவுள்ளது. தற்போது நியமனம் செய்யும் பணிகளில் EWS ஒதுக்கீடு பின்பற்றபடமாட்டாது. ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி வரும் 16ஆம் தேதி அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என்று கூறினார்.