முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 29 அல்ல 30-ஆம் தேதிகளில் பென்ஷன் வழங்கப்படும். இந்நிலையில் பலருக்கு ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் இதுவரையில் வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், தேசத்துக்காக உழைத்ததற்கு இது தான் கைமாறா? இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக, இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரருக்கு ஏப்ரல் மாத பென்ஷன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விளக்கமும் வராத காரணத்தால் இந்தப் பிரச்சினை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் புதிய பென்சன் வழங்க அமைப்புக்கு ராணுவம் மாறியுள்ளது. மேலும் இந்த குளறுபடிகள் காரணம் என சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஆயுள் தண்டனை வழங்கப்படவில்லை என கூறுகின்றனர்.