ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, இயக்குனர் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய ஜாக் டோர்சி, தன் பதவியை கடந்த நவம்பர் மாதத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு நான் மீண்டும் வரமாட்டேன் என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.