தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.
ஜெயலலிதா எந்த நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சசிகலாவை குற்றம் சாட்டபடுவதை தவிர வேறு எந்த முடிவுக்கு வர இயலாது. சசிகலா, ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவர் கே.எஸ்.ரவிக்குமார், அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரச் செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.